அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டி – அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவுக்கு கூட இலங்கை அமைச்சர்களால் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நன்மை அடைந்து வருவதாக ஜே. வி .பி தெரிவித்துள்ளது.
ஜே வி பி யின் பொது செயலாளர் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்த நிலையிலும், தொடர்ந்தும் மக்களுக்கு எரிபொருளின் விலையை குறைத்து வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.