இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்திருந்தன.
இவ்வாறு வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அரச தரப்பை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேலும் சில ஆதாரப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.