பக்கங்கள்

04 ஜூன் 2012

நாமல் பெயரில் நீச்சல் தடாகம்!

யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் மற்றும் ஆளுநர் சந்திரசிறிக்கான ஆடம்பர பங்களா அமைப்பு வேலைக்கென வடமாகாணசபையின் நிதிகள் சுரண்டப்பட்டுவிட்டதால் இவ்வாண்டில் புதிய வேலைதிட்டங்களையோ அவசர திருத்த வேலைகளையோ எதனையும் செய்யமுடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் கட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் பிரச்சாரத்துடன் நாமலின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு நீச்சல் தடாக வேலைகளை முன்னெடுப்பதாக கூறப்பட்ட போதும் அது இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமலின் செல்ல அங்கிளான ஆளுநர் சந்திரசிறி மீதி நிர்மான வேலைகளை அவசர அவசரமாக மாகாணசபையின் வேலைத்திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு செய்து வழங்கியிருந்தார். இதற்கென சுமார் ஜந்து மில்லியன் வரையிலான நிதி செலவளிக்கப்பட்டிருந்தது. குறித்த நிதி வடமாகாண பாடசாலைகளது இவ்வாண்டு அவசர திருத்தவேலைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதே போன்று யாழ்.பழைய பூங்காப்பகுதியினில் ஆளுநர் தனது வதிவிடமாக கட்டி முடித்துள்ள நட்சத்திர அந்தஸ்து மிக்க பங்களாவிற்கும் சுமார்190 மில்லியன் மாகாணசபை நிதியை எடுத்தாடியுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற தமது மகள் சகிதம் கடந்த வாரமே அதனை அவர்; திறந்தும் வைத்துள்ளார். திறப்பு விழாவிற்கு தனது நெருங்கிய தரப்புகளையே அவர் அழைத்துமிருந்தார். இத்தகைய செலவுகளால் வடக்கு மாகாண சபையில் இவ்ண்டில் மாகாணசபை நிதி மூலம் எந்தவிதமான வேலைதிட்டங்களையும் செய்யமுடியாத நெருக்கடி நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே வடக்கிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் ஓரு மில்லியன் பணத்தை அரசு அபிவிருத்தி என்ற வகையில் செலவளித்துள்ளதாக ஆளுநர் திருவாய் மலர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.