பக்கங்கள்

06 ஜூன் 2012

மகிந்தவின் வாகனம் மீது முட்டை வீசித்தாக்குதல்!

லண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாகனம், ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது.விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் இவ்வாகனத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த வாகனத்தின் மீது வீழ்ந்து சிதறியுள்ளன. இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெரும் திரளான மக்களை திரட்டி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.