பக்கங்கள்

12 ஜூன் 2012

மொழிபெயர்ப்பு கடமைகளில் போராளிகள்!

இலங்கை காவற்துறை திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகளை அரசு கடமையில் ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது குடாநாட்டிலிருந்தும் வன்னியிலிருந்தும் தொடர் விசாரணைகளுக்கென பலரும் தொடர்ச்சியாக நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளனர். முன்னாள் போராளிகளது குடும்பங்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர்களென பலரதும் குடும்பங்களுக்கும் இவ்வாறு விசாரணைக்கென அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. அவர்களிற்கான சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாகவே முன்னாள் போராளிகள் பலரும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எனினும் அவ்வாறு பயன்படுத்தப்படும் போராளிகளுள் இதுவரை காணாமல் போயுள்ளதாக கூறி பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களால் தேடித் திரியும் சிலரும் இருந்ததாக தெரியவருகின்றது.எனினும் அவர்களும் ஆட்களை அடையாளங்காணும் பணிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக இவ்வாறு விசாரணைக்காக சென்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான உடைமைகளை தேடிக்கண்டு பிடிப்பதில் அரசு முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தகவல்களை தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு தொடர் விசாரணைகளை பொதுமக்களிடம் படைத்தரப்பு முன்னெடுத்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.