ஹம்பாந்தோட்டை கட்டுவான பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வடக்கு கிழக்கில் நாள் தோறும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்டபாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தொடர்ந்தும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைஇராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துணை இராணுவக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல் மற்றும் சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவினை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ம் ஆண்டு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையிலும் துணைஇராணுவக் குழுக்கள் பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை களைவதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதாக அரசாங்கம் பொய்யாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.