பக்கங்கள்

03 ஜூன் 2012

மகிந்தவை வரவேற்க புலிக்கொடியுடன் தமிழர்கள் தயார் நிலையில்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. ம் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அறிந்த வட்டாரங்கள், தெரிவித்துள்ளனர். பிரித்தானிய தமிழர்களைப் பொறுத்தவரை இது ஒரு பாரிய வெற்றியாகும் ! ஏன் எனில் ஒரு நாட்டின் ஜனாதிபதி, அதுவும் ஆசியக்கண்டத்தில் தான் புலிகளை வென்றேன் என மார்தட்டிக்கொள்ளும் மகிந்தர், பிரித்தானிய தமிழர்களுக்கு பயந்துபோய், தான் புறப்படும் நேரத்தையும் காலத்தையும் மறைக்கவேண்டி உள்ளதே ! இது உலகில் எங்கும் நடைபெறாத விடையம் ஒன்று ! தான் பிரித்தானியாவுக்குச் செல்வதை தனது சொந்த நாட்டு மக்களுக்குக் கூடச் சொல்லாமல், திருடர்கள் போல புறப்படவேண்டி நிலையில் உள்ளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ! இதுவே பிரித்தானிய தமிழர்களின் வெற்றியாகும் ! இருப்பினும் இன்று மாலை 8.00 மணிக்கு லண்டன் ஹீத்துரோ (T4) விமான நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது. லண்டன் வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியே வரும்போது முதன் முதலாகக் காணவிருப்பது புலிக்கொடியைத் தான் ! லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் திரண்டு ஹீத்துரோ விமான நிலையம் செல்லவேண்டும் என ஏற்பாட்டாளர்களும் இளையோர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.