லங்கா மிரர் இணையத்தளம் மற்றும் ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளம் அமைந்துள்ள வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். ‘அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்ததாகவும் ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.’ எனவும் அவர் கூறினார்.
நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள லங்கா மிரர் ஆசிரியர் ருவன் பேர்டினான்ட் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக சிலரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.