பக்கங்கள்

17 ஜூன் 2012

காணிகளை கையகப்படுத்த துடிக்கிறார் வடமாகாண ஆளுநர்!

newsவடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் காணிகளைக் கையகப்படுத்த வடக்கு மாகாண ஆளுநர் முனைகிறார். தேர்தலின் பின்னர் இவற்றுக்கான அதிகாரம் தனது கையில் இருக்காது என்பதாலேயே அவர் இவ்வாறு செய்கிறார். இதன் முதற்கட்டமாகவே அரச அதிபர்களாகப் பெரும்பான்மை இன அதிகாரிகளை அவர் நியமிக்கிறார் என வட மாகாண சபையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தீடீர் அறிவிப்பு விரைவில் அரசினால் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் உள்ளது. தேர்தல் நடைபெற்றதால் முதலமைச்சரின் கீழ் நிர்வாகம் வந்தவுடன் காணி விடயம், காணி கையகப்படுத்தும் விடயம் முடிவுக்கு வந்துவிடும். அதற்கு முன்னர் தனது அதிகார் எல்லையைப் பயன்படுத்திக் காணிகளைப் படையினருக்கும், கடற்படையினருக்கும் பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்பதில் கடும் பிரயத்தனம் செய்கிறார் வடக்கு ஆளுநர். கடந்த இரண்டு வருடங்களாகக் காணி பெறும் முயற்சி இடையிடையே மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை. தற்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் காணிகளைக் கையகப்படுத்தும் கைங்கரியத்தை முழுமூச்சாக மேற்கொள்கிறார் ஆளுநர் என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.