பக்கங்கள்

06 செப்டம்பர் 2011

கரம்பனில் புலிக்கொடி ஏற்றினாராம்,நாரந்தனை இளைஞன் மீது படையினர் தாக்குதல்!

கடந்த வருடம் நாரந்தனையில் புலிக்கொடி ஏற்றினாராம் என்ற சந்தேகத்தில் இராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டு 3 மணிநேரம் தாக்கப்பட்ட நாரந்தனை இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.
நாரந்தனை வடக்கு, நாரந்தனையைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி கலைவாணன் (வயது 21) என்ற இளைஞரே இராணுவத்தினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார் என்று போதனா வைத்தியசாலைப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் நவம்பர் மாதம் ஊர்காவற்றுறை கரம்பனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடி ஏற்றப்பட்டமை தொடர்பிலேயே இவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார் என்று பதிவுகளில் இருந்து தெரியவருகின்றது. கடந்த மாதம் 25ஆம் திகதி கரம்பன் இராணுவ முகாமுக்கு இவர் அழைக்கப்பட்டார். இரவு 7 மணிக்கு முகாமுக்குச் சென்ற இவரை 3 மணி நேரமாகத் தடுத்து வைத்துத் தாக்கிய இராணுவத்தினர் பின்னர் விடுவித்தனர்” என்று பதிவேடுகளில் கூறப்பட்டுள்ளது.
வலி தாங்க முடியாமல் குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையின் பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.