சில நாடுகளின் இராஜதந்திரிகள் இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் குறித்த இராஜதந்திரிகள் நேரடியாக சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறை சார் அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்களின் செயலாளர்களது அனுமதியின்றி இராஜதந்திரிகள் அரச நிறுவன அதிகாரிகளை சந்திப்பது இராஜதந்திர வரைமுறைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்படக்கூடாது என குறித்த இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் துறை அமைச்சர்களும் அமைச்சு செயலாளர்களும் அறிந்திராத வகையில் அரச நிறுவன உயரதிகாரிகளுடன் சில நாட்டு இராஜதந்திரிகள் நேரடியான தொடர்புகளைப் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு இராஜதந்திர வரைமுறை மீறிச் செயற்படும் அநேகமான இராஜதந்திரிகள் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள் இலங்கையில் நல்லாட்சி நிலவவில்லை என குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சீனா போன்ற நாடுகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை எனவும் சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.