யாழ். நுணாவில் பகுதியில் நேற்றுமாலை 7 மணியளவில் பஸ்ஸை விட்டு இறங்கி வீடு சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணை வழிமறித்த சில இனம்தெரியாத நபர்கள் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அப் பெண் அவலக்குரல் எழுப்பிய போது அயலவர்கள் விரைந்து வர இனம்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
தன் மீது இனந்தெரியாதவர்கள் மிக மோசமான முறையில் அங்க சேஷ்டை செய்ததாகவும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகவும் குறித்த பெண் நுணாவில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
தங்க நகைகள் அணிந்திருந்தும் இனங்காணப்படாத குழுவினர் அவற்றை கழற்ற முற்படவில்லை இதனால் பாலியல் வல்லுறவு மேற்கொள்வதில் குறியாக இருந்தார்களா எனச் சந்தேகம் எழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் நின்ற சிலர் ஓடிவரவே குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளார்கள். மூவர் அடங்கிய குழுவே இவ்வாறு தன் மீது சேஷ்டைகள் புரிந்ததாக அந்த யுவதி கூறியுள்ளார். தற்போது அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் தேடுதல் நடத்துவதாகத் தெரியவருகின்றது.
யுவதியின் ஆடைகள் கிழிந்துள்ளதாகவும் காதுப் பகுதியில் காயம் காணப்படுவதாகவும் நுணாவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.