யாழ்.குடாநாட்டில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அமைக்கப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை அறிமுகப்படுத்து வதற்காக யாழ்.வீரசிங்கம் மண் டபத்தில் நேற்று மாலை இடம் பெற்ற கூட்டம் முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. ஆளும் தரப்பை மட்டுமே கொண்டு இந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதான தோற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.
யாழ். பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவினது ஏற்பாட்டில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்ற மர்ம மனிதர்கள் தொடர்பான சர்சையை அரசியல் மயப்படுத்த முயல்கின்றார்கள்.
எமது மண்ணில் மீண்டும் அடையாள உண்ணாவிர தம், பகிஷ்கரிப்பு என்று செய்கிறார்கள். இதனை நாங்கள் எதிர்க்க வேண்டும் என்று நிகழ் வில் பேசிய மாநகர முதல்வர் யோகேஸ்வரி தெரிவித்தார்.
எனினும் நிகழ்வில் உரையாற்றிய சமயத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் இன்று அமை தியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க வேண்டும்.
மீண்டும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்றனர்.ஒவ்வொரு கிராமங்களின் கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் கோயில் மதகுருமா ரின் தலைமையில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப் படும் என்றும் இதில் கிராம அலுவலர்கள், பாடசாலை அதிபர் கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உத்தயோகத்தர்கள், சமூகப் பெரியார்கள் ஆகியோர் நியமிக்கப்படுவர் என்றும் பொலிஸார் அறிவித்தனர்.
நிகழ்வில், சிவில் சமூக பாதுகாப்பு குழுக்களான ஆடைகள், அடையாள அட்டைகள் என்பனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் சமூக மட்டப் பிரச்சினைகள், மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் சிவில் சமூக பாதுகாப்புக் குழுக்களின் ஊடாகவே தீர்த்து வைக்கப்பட வுள்ளன என்றும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.