திருநெல்வேலி பாரதிபுரம், கொக்குவில் பிரதேசங்களில் நேற்று இரவு முழுவதும் மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் குறித்த பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதேவேளை பாரதிபுரம் பகுதியில் பெண் ஒருவரின் மார்பு பகுதியில் மர்ம மனிதர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்றுள்ளாள். இதன் போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மர்ப்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கொக்குவில் வளாக வீதியில், சிங்களவர்கள் பயணித்த வான் ஒன்றை மர்ம மனிதர்கள் அவ் வானில் தான் வந்தனர் என எண்ணி அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். இதன் பின்னதாக இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.