திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை காணப்படுவதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன் வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும். இந்தக் காணிகளுக்கான உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருந்தும் தமது காணிகளை மீளப் பெற முடியாதுள்ளதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி காணிச் சொந்தக்காரர்களுக்கான காணிகளை பெற்றுத்தர உரிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஜூன் 2012
29 ஜூன் 2012
இணைய அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள புலனாய்வாளர்கள்!
தமிழ்க்கைதிகள் சிறைப்பிடித்த காவலர்கள் மீட்கப்பட்டுள்ளனராம்!
28 ஜூன் 2012
நில அபகரிப்புக்கெதிரான போராட்டம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாம்!
27 ஜூன் 2012
தீவகத்திற்கு மின்சாரம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்!
மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள தீவகப் பகுதியின் அனைத்து இடங்களுக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மின் விநியோகம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையினர் உறுதியளித்துள்ளனர்.
தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பிரதேசசபை மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தீவுப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்க மின்சார சபையினர் பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினார்கள். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கைஎனவும், அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை விடுத்து உங்கள் விருப்பப்படி செயலாற்ற முடியாது எனவும் மின்சார சபை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன் பணம் செலுத்தியவர்களுக்கு முன்பதாக மீளக்குடியமர்ந்த மக்களுக்கான இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன் தற்போது மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் எப்போது மின் விநியோகம் வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்குமாறும் அவர்களிடம் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மின்கம்பங்கள் நடப்பட்ட இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார சபை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
26 ஜூன் 2012
படைகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது திருமுறிகண்டியில் மக்கள் ஆவேச ஆர்ப்பரிப்பு!
25 ஜூன் 2012
யாழ்,மக்களில் சிங்கள இரத்தம்தான் ஓடுகிறதாம்!
பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு 125 தொடக்கம் 150 லீற்றர் வரையான இரத்தம் படையினரால் வழங்கப்படுகிறது. இப்போது பெரும்பாலான யாழ்ப்பாண மக்களிடம் ஓடுவது சிங்கவர்களின் இரத்தம் தான்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
24 ஜூன் 2012
மிரட்டலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடோம்!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றும் தாம் எவ்விதமான பயமுறுத்தலுக்கும் அஞ்சி தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.
தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் பயமுறுத்தலுக்கு தான் பணியப் போவதில்லை என நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அந்தச் சம்மேளனத்தின் தலைவர் நிமல் ரஞ்சித் தேசிறி கூறினார்.
இந்த வார முற்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய இருவர், அவரின் 17 வயது மகள் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டு தேவசிறியின் அயலுக்கு இரண்டு தடவை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையிட்டு அடுத்த நாள் உயர்கல்வி அமைச்சரிடம் முறையிட்ட போது அவர் "இப்போது இந்த புதிய கதையை காவித்திரிகிறீர் களா?' என கேட்டார். அமைச்சர் தனது முறைப்பாட்டை கணக்கில் எடுக்க வில்லையென தேவசிறி கூறினார்.
அமைச்சருடனான பேச்சுக்களில் நாம் சம்பளங்களை முக்கியப்படுத்தி பேசவில்லை. நாம் ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழகத்தின் சுயாதீனம், பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கல் கல்வி மீதான பொதுச் செலவு என்பன பற்றியே கூடுதல் கவனம் செலுத்தினோம்.
இவ்விடயங்கள் ஆழமாக பேசப்பட வேண்டிய விடயங்கள். ஆயினும் அது நடப்பதில்லை என அவர் கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வண. தம்பர அமில தேரர் தமது சங்கம் வேலை நிறுத்தத்தை நடத்தியே தீரும். என்ன நடந்தாலும் எத்தனை மிரட்டல் வந்தாலும் எம்மை தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
23 ஜூன் 2012
வழங்கப்படும் காணிகளில் குடியேறுங்கள்"முறிகண்டி மக்களுக்கு பிரதேசசெயலர் மிரட்டல்!
22 ஜூன் 2012
கட்டுவான பாணியில் வடக்கு கிழக்கில் படுகொலைகள்!
ஹம்பாந்தோட்டை கட்டுவான பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வடக்கு கிழக்கில் நாள் தோறும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்டபாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தொடர்ந்தும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைஇராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துணை இராணுவக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல் மற்றும் சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவினை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ம் ஆண்டு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையிலும் துணைஇராணுவக் குழுக்கள் பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களை களைவதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதாக அரசாங்கம் பொய்யாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
21 ஜூன் 2012
திருப்பி அனுப்பப்படுகின்றனர் சத்திரசிகிச்சை நிபுணர்கள்!
20 ஜூன் 2012
நயினை நாகபூஷணிஅம்மன் நேற்று கொடியேற்றம்!

19 ஜூன் 2012
தயவுசெய்து விட்டுவிடுங்கள்; வேம்படியின் புதிய அதிபர் மன்றாட்டம்!
18 ஜூன் 2012
அவுஸ்ரேலியா புறப்பட இருந்த படகை தடுக்க சென்ற பொலிசாரும் படகில் ஏறி தப்பினரா?
படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிட சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்களாவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும்,எதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் காரர்களுடன் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் படகில் அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என இன்னுமொரு தரப்பு தெரிவித்துள்ளது.
யாழில் தொடரும் விஷமிகளின் அடாவடி!
17 ஜூன் 2012
காணிகளை கையகப்படுத்த துடிக்கிறார் வடமாகாண ஆளுநர்!
பிரித்தானியாவில் தமிழர் படுகொலை!
16 ஜூன் 2012
காரைநகர் வன்புணர்வுச் சம்பவம்: சந்தேகநபரின் சேட்டைப் பிடித்து அடையாளம் காட்டினார் யுவதி!
![]() |
காணிகளை நாம் அபகரிக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி உண்டா?கேட்கிறார் கோத்தபாய
வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த கோத்தபாய ராஜபக்ஷ, “வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்” என்றும் சவால் விடுத்தார்.காணி சுவீகரிப்பு என்பது வடக்கில் சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் பொய்ப்பிரசாரம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாகப் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் காணிகள், குறிப்பாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை; அபகரிக்கப்படவுமில்லை. சில இடங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தினாலும் அந்தக் காணிகள் மீளளிக்க முடியாத ஒரு நிலைமை இருக்குமாயின் காணி உரிமையாளருடன் பேசி அவர்களுக்குரிய காணி நட்டஈட்டைச் செலுத்திய பின்னரே காணியை நாம் ஏற்கிறோம்.
இதுதான் உண்மை நிலைமை. இதற்கப்பால் அரச காணிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றையே நாம் பொறுப்பேற்கிறோம். இன வாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதக் கண்ணோட்டத்துடன் இவற்றை நோக்கி தமிழ் மக்களிடம் தவறான அரசியலை நடத்தக்கூடாது.
வடக்கின் பாதுகாப்பு
வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட வேண்டுமெனக் கேட்கிறார்கள். அதிகளவான இராணுவ முகாம்கள் வடக்கிலா இருக்கின்றன? இராணுவ முகாம்கள் கூடுதலாக இருப்பது அநுராதபுரம் மாவட்டத்தில். இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில்தான் கூடுதலான இராணுவ முகாம்கள் உள்ளன. எனவே, கூடுதலாக இராணுவ முகாம்கள் வடக்கில் உள்ளன, அவை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கின்றன என்று தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கித் தவறாக வழிநடத்தக்கூடாது.
புலிகளை முறையிட்டார்களா?
புலிகள் இருந்தபோது எத்தனையோ தமிழர்களின் காணிகள் அவர்களின் கையகப்படுத்தி இருந்தார்கள். கொழும்பின் அரசியல் பிரமுகர் சார்லி மகேந்திரன் மற்றும் முன்னாள் மேயர் கணேசலிங்கம் போன்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம்தான் தீர்த்துவைத்தோம்.
புலிகளின் காலத்தில் தமிழர்களின் காணிகளும், சொத்துகளும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. இப்போது வீறாப்பாகப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பினரோ அல்லது வேறு எவருமோ புலிகள் காணிகளை அபகரித்துள்ளனர் என்று அப்போது அமெரிக்காவிடமோ அல்லது இந்தியாவிடமோ முறையிட்டார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.
இப்போது தமிழ்நாட்டுக்குச் சென்று முறையிடுபவர்கள் அப்போதும் இதனைச் செய்திருக்கலாமல்லவா?
வடக்கில் நாம் புலிகளைப் போன்று செயற்படவில்லை. தனியாரின் காணிகளைக் கபளீகரம் செய்யும் எந்த நோக்கமும் எமக்குக் கிடையாது. அவ்வாறான திட்டங்களும் எம்மிடம் கிடையாது. இவ்வாறு குறிப்பிட்டார் கோட்டாபய.
15 ஜூன் 2012
கருணா சொல்லியே தேசியத் தலைவரின் மகன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
14 ஜூன் 2012
இஸ்லாமியர்களின் கடைகளை அசிங்கப்படுத்திய சிங்கள வெறியர்கள்!
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலரே இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக காலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
13 ஜூன் 2012
வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்!
தமிழர்கள் தொடர்ந்து பொறுமை காக்கமாட்டார்கள்!விக்கிரமபாகு கருணாரட்ன
12 ஜூன் 2012
மொழிபெயர்ப்பு கடமைகளில் போராளிகள்!
இலங்கை காவற்துறை திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகளை அரசு கடமையில் ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது குடாநாட்டிலிருந்தும் வன்னியிலிருந்தும் தொடர் விசாரணைகளுக்கென பலரும் தொடர்ச்சியாக நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளனர். முன்னாள் போராளிகளது குடும்பங்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர்களென பலரதும் குடும்பங்களுக்கும் இவ்வாறு விசாரணைக்கென அழைக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. அவர்களிற்கான சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாகவே முன்னாள் போராளிகள் பலரும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் அவ்வாறு பயன்படுத்தப்படும் போராளிகளுள் இதுவரை காணாமல் போயுள்ளதாக கூறி பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களால் தேடித் திரியும் சிலரும் இருந்ததாக தெரியவருகின்றது.எனினும் அவர்களும் ஆட்களை அடையாளங்காணும் பணிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக இவ்வாறு விசாரணைக்காக சென்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான உடைமைகளை தேடிக்கண்டு பிடிப்பதில் அரசு முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தகவல்களை தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு தொடர் விசாரணைகளை பொதுமக்களிடம் படைத்தரப்பு முன்னெடுத்து வருகின்றது.
11 ஜூன் 2012
சரணடைந்து காணாமற்போனோர் குறித்துஐ.நாவிசாரிக்கப் போகிறது!
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்தக் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வேண்டுகோள், நவிபிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக உண்மை கண்டறியும் குழுவை அனுமதிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இந்த நேர்முகத்துக்கு முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் இதுதொடர்பாக சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக நம்பப்படுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை!
10 ஜூன் 2012
கிழக்கு முஸ்லீம் மக்கள் கக்கீம் முதல்வராவதை விரும்பவில்லை!
மக்கள் காணிகளை அபகரித்து மண்டைதீவில் படை முகாம் விஸ்தரிப்பு!
யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்டைதீவு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபரித்து கடற்படை தளத்தினை விரிவு படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.மண்டைதீவு கடற்படை தளத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொள்ளும் நோகில் அவற்றிற்கு உதவுமாறு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை சிறீலங்கா கடற்படையினர் நாடியுள்ளதாக யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைகொண்டுள்ள படையினர் அந்த காணிகளை படையினருக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் மற்றும் பன்னாடுகளிலும் வாழ்ந்துவருகின்றார்கள் இவ்வாறான மக்களின் விபரங்களை திரட்டிய படையினர் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
மண்டைதீவு பகுதியின் 1 ஆம் வட்டாரத்தில் அம்மன்கோவிலுக்கு கிழக்காக உள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான வளம்தரும் நிலத்தினை சிறீலங்கா கடற்படையினர் அபகரித்துள்ளார்கள்.
இவ்வாறு அபகரித்து பாரிய கடற்படை தளத்தினை விரிவுபடுத்தியுள்ள நிலையில் மேலும் 50 மீற்றர் சுற்றுவட்ட நிலத்தினை கையகபடுத்த அரச இயங்திரங்களை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் தற்போது பாரியளவிலான கடற்படை தளமும் பல ஆயிரம் படையினர் தங்ககூடிய வகையில் கட்டடங்களும் அவர்களுக்கான விடுதிகளம் மற்றும் உலங்கு வானூர்தி தளமும் கடற்படை தளத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது,வடக்கில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக பன்னாடுகளுக்கு கூறிக்கொள்ளும் சிறீலங்கா அரசு தமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தி படைமுகாம்களை அமைத்து மேலும் படையினரின எண்ணிக்கையினை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,யாழ்ப்பாணத்தின் தீவக பகுதிகளில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கடற்படையினர் நிலைகொண்டுள்ளார்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்றவகையில் படையினரின் தங்கு விடுதிகளும் இந்த மண்டைதீவு கடற்படை முகாமில் அமைக்கப்படுகின்றது.
09 ஜூன் 2012
படையினருக்கு காணி கொடுப்பதில்லையென தீர்மானம்!
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாலம்பை கலட்டியில் உள்ள 10 பரப்புடைய
பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரி சபைத்
தவிசாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் .
14 ஆவது கெமுனு ஜோச் படைப்பிரிவினரே குறித்த
காணியைத் தமக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர். குறித்த காணி தனிநபருக்கு
சொந்தமானது எனவும் அவர் அதனை படைத்தரப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும்
தெரிவித்து மாவட்ட விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு பத்திரங்கள்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த காணி பிரதேச சபைக்கு
சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தக் காணியை தமக்கு வழங்குவதற்கு
அனுமதிக் கடிதம் வழங்குமாறு ஆர்.எம்.கே.பதுகே எனும் மேஜர் தர இராணுவ அதிகாரி
ஒருவரின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பபட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு ஏற்ப காணியை பகிர்வதா
இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் வலி வடக்கு பிரதேச சபையில்
நேற்று இடம்பெற்றது.
இதில் உறுப்பினர்கள் ஏகமனதாக 1971 ஆம் ஆண்டில்
எமக்கு தரப்பட்ட காணி அப்போதைய சூழ்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாமல்
போய்விட்டது.
குறித்த காணியை சுற்றியுள்ள மக்கள் அவர்களது
சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்ததும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் எனவே
அந்தக் காணியை வழங்குவதில்லை என்று தீர்மானித்தனர்.
இலங்கை அரசின் போர்க் குற்றம்! மேலும் புகைப்படங்கள்.
இவ்வாறு வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அரச தரப்பை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேலும் சில ஆதாரப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
08 ஜூன் 2012
யாழில் சிறீலங்காவின் அரசியல் யாப்பு மாணவர்களால் தீக்கிரை!
அதிர்வு இணையம்
கனடிய தமிழ் மக்கள் பெரும் கண்டனம்!
வெற்றிக்குமரன் தமிழரசி
07 ஜூன் 2012
குடாநாட்டிலும் காணி அபகரிப்பில் சிங்களப்படைகள்!
06 ஜூன் 2012
மகிந்தவின் வாகனம் மீது முட்டை வீசித்தாக்குதல்!
பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தரைவைத்த சிங்களப்படைகள்!
கிளிநொச்சியில் உள்ள கிருஷ்ணபுரம் என்ற பகுதியில் இருந்த பிள்ளையாரை பிறிதொரு இடத்துக்கு மாற்றி விட்டு, அப் பகுதியில் புத்தவிகாரை ஒன்றை அமைத்துள்ளனர் இராணுவத்தினர்.
இராணுவத்தினரின் இச் செயற்பாட்டுக்குப் பிரதேச மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
புலிகள் காலத்தில் நவம் அறிவுக்கூடம் அமைந்திருந்த இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 20ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ள படையினர் அதற்கு முன்பாகவுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்துள்ளனர்.
இதன் பின்னர் வீதியை பார்த்தவாறு அமைந்திருந்த ஆலயத்தை மறுபுறமாக மாற்றியமைத் துவிட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து சிறிய விகாரை ஒன்றினையும் அமைத்துள்ளனர்.
இந்த இடத்தில் மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்களால் வழிபடப்பட்டுவந்த ஆலயத்தை மக்களின் அனுமதியில்லாமல் உடைத்தது, மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து விகாரையும் அமைத்துள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதி படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மக்கள் வழிபாட்டிடத்தையும் மாற்றியமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதேவேளை இந்து ஆலயம் அகற்றப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்களின் ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)