யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் ஒரே இரவில் எட்டிற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் பாரிய திட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நள்ளிரவு திருநெல்வேலி சந்திப்பகுதி, திருநெல்வேலி தபால் பெட்டி சந்திப் பகுதியில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. திருநெல்வேலி சந்திப் பகுதியில் அரச வங்கிக் கிளை ஒன்றும் இரண்டு தனியார் வங்கிக் கிளைகளும் அமைந்திருக்கின்றன. அவற்றின் காவலாளிகள் காவல் கடமையில் இருந்த அதேவேளை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
திருடர்கள் வாகனங்களில் சென்றே திருட்டினை மேற்கொண்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. வழமைபோல் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.