திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்குள் இன்று காலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
19 வயது பெண் ஒருவர் மீது 26 வயதுடைய இராணுவ வீரரென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் தனது மனைவி என்றும், அப்பெண்ணின் பெற்றோர் தம்மை சேர்ந்து வாழ இடமளிக்கவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் குடும்பத்தாருடன் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பின்னர் குறிப்பிட்ட நபர் கைக்குண்டொன்றை வீசியதாகவும் ஆனால் அக்கைக்குண்டு வெடிக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட இராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படுகாயமடைந்த பெண் கராப்பிடிய வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.