கொட்டாஞ்சேனையில் 55 வயதான வர்த்தகர் ஒருவர் நேற்று கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிறிஸ்டோபர் எனும் இவ்வர்த்தகர் ஜம்பெட்டா வீதியில் வைத்து வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் கதட்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இக்கடத்தலுக்கு எதிராக கொட்டாஞ்சேனையில் நேற்று ஆர்பபாடடமொன்று நடைபெற்றது. இதில் 300 இற்கும் அதிமானோர் பங்குபற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கடத்தலுக்கு காரணம் என்னவெனத் தெரியவில்லை எனவும் அப்பகுதி குடியிருப்பாளர்களின் தகவலின்படி இவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலையத்தில் வர்த்தகரின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். அண்மைக் காலத்தில், வரகாபொல, களனிய, தெமட்டகொடை, ராகம பகுதிகளில் கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.