பக்கங்கள்

05 டிசம்பர் 2011

சிலர் காணும் பகல் கனவு பலிக்கப்போவதில்லை.

சில வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேர்ந்த கதி எனக்கும் நடக்கும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது வெறும் பகல் கனவே என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
அம்பலாங்கொடை, பட்டபொல சிறி சுபத்ராராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அற்ப அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த பயணத்தை நிறுத்தி விட முடியாது.
அதிபர் பதவியை விட நான் மேலே செல்வதற்கு உச்சமானது வேறில்லை.
அரசியலில் நன்கு அனுபவப்பட்ட நான் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் கலங்கமாட்டேன்.
விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க முடியாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. அதனால் விமர்சனங்களைச் சலிப்படையாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
சில வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேர்ந்த கதி எனக்கும் நடக்கலாம் என்றுச் சிலர் எதிர்பார்க்கின்றனர். அது வெறும் பகல் கனவு.
சிலர் நாடுகளுக்குச் நாடு சென்று நாட்டை விமர்சிக்கின்றனர். அவர்களின் விமர்சனங்களை ஏற்க எமது மக்கள் தயாரில்லை.
இவர்களின் செயற்பாடுகளைப் பார்த்து சில வெளிநாட்டுத் தலைவர்கள் சிரிக்கின்றனர்.
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.
எமது விடயங்களை வெளிநாடுகளுக்குச் சென்று கூறுவதை விட அதனை முதலில் என்னிடம் கூறுவதே சிறந்தது.“ என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.