பக்கங்கள்

01 டிசம்பர் 2011

காதல் தோல்வி பெண் சிப்பாய் தற்கொலை.

காதலில் ஏற்பட்ட தோல்வி, விரக்தி காரணமாக இளம் பெண் இராணுவ வீராங்கனை ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (01) காலை மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற 24 வயதான பெண் இராணுவ வீராங்கனை யே ரி-54 ரா துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்கொலை தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.