
இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்பாவின் உடலுக்கு பெருந்தொகை

தீருவில் திடலில் மக்களின் அஞ்சலிக்காக பார்வதி அம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெருமளவு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகளை அகற்றுமாறு படையினர் நிர்ப்பந்திக்கின்ற போதிலும், பொதுமக்கள் அதற்கு மறுத்துவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை காணப்படுகின்றது.
அதேவேளையில், பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் காணப்படும் பிரபாகரனின் பெயரை அகற்றிவிடுமாறும் படையினர் பொதுமக்களை நிர்பந்திப்பகதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களைத் துன்புறுத்தும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளை படையினர் தொடர்ந்தால் பாதகமான விளைவுகளை படையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்வெட்டித்துறை சிவில் சமூக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை காலை இடம்பெறும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.