
83 வயதுடைய இவர் தனது மகளின் வீட்டுக்கு அருகாமையில் தனித்து வாழ்ந்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டில் புகைமூட்டம் காணப்பட்டதனை அடுத்து அயலவர்கள் சென்று பார்த்த போது இவர் எரிந்த நிலையில் காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற காவற்துறை அதிகாரியான இவரது கணவர் அண்மையிலேயே மரணமானார் எனவும் இந்தச் சம்பவம் தற்கொலையா? தீ விபத்தா? அல்லது கொலையா என்பது தொடர்பில் காவற்துறை விசாரணைகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.