
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன், இலங்கை தூதரகத்தின் முன் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு 112 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்துவரப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திமுக எம்பி கனிமொழி உள்ளி்ட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவும் தேர்தல் திரைப்படத்துக்கான தி.மு.க. ஒத்திகையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.