
வடமராட்சி கிழக்கு, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பாடாசாலை மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 40 வயதான சந்தேக நபர், பருத்தித்துறை நீதவான் நீதிபதி திருமதி ஸ்ரீரீநிதி சந்திரசேகர் வீட்டில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாடசாலை விட்டு வீடு திரும்பிய குறித்த மாணவியை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் கடத்திச் சென்று பளையிலுள்ள பாழடைந்த வீட்டில் வைத்து பாலியல் குற்றம் புரிந்ததாக நெல்லியடி பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.