
யாழ்ப்பாணம் மூளாய் உள்ளிட்ட நுளைவாயில்களிலும் தீவகப் பகுதிகளிலும் கடற்படைத் தளங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார் 15 வருடங்களின் பின் இந்தப் பகுதிகளில் கடற்படைத் தளங்கள் மூடப்படுவது குறித்து மக்களிடையே மகிழ்ச்சி காணப்பட்டது. ஊடகங்களும் இது குறித்து பிரமாதப்படுத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தன. விசேடமாக முளாய் உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றின் கடற்படைத் தளங்கள் முற்றாக மூடப்பட்டு கடற்படையினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
எனினும் அந்தக் கனவுகள் நிலைத்திருக்காமல் கடற்படையினர் வெளியேறிய தளங்களில் இராணுவத்தினர் புதிதாக படைத்தளங்களை அமைத்து வருகின்றனர். தீவகப் பகுதிகளின் பல இடங்களில் இருந்தும் கடற்படையினர் வெளியேறுவதாகவும் அவற்றை இராணுவம் பொறுப்பேற்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. யாழ் பண்ணைவீதியில் இருந்து ஊர்காவற்துறை வரையிலான வீதிகளை உள்ளடக்கியும் இந்த நடைமுறை வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதற்கமைவாக கடற்படையினர் முகாம்களை அகற்றிச் செல்ல இராணுவத்தினர் புதிய முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த வகையில் குடாநாட்டில் எந்த ஒரு படைமுகாம்களும் மூடப்படவில்லை என்பதுடன் கடற்படையினர் விட்டுச் செல்லும் இடங்களை இராணுவம் தம்வசப்படுத்துவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.