பக்கங்கள்

03 நவம்பர் 2011

வைப்பகத்தில் பணம் எடுக்கச்சென்ற பெண் மீது பாலியல் வன்கொடுமை!யாழில் சம்பவம்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கொமஸ்ஷல் ( Commercal BanK ) வங்கியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரால் மயக்க மருந்து கலந்த பபுள்கம் கொடுத்து இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டுள்ளர்.
இந்தச் சம்பவமானது நேற்று செவ்வாய் கிழமை (01.11.2011) மாலை வேளையில் நடைபெற்றுள்ளது. குறித்த இளம் பெண் யாழ்.நகரில் உள்ள புடவைக்கடை ஒன்றில் வேலை செய்பவர். அவர் நேற்று மாலை தன்னியக்க பணப்பரிமாற்று சேவை (ATM) மூலம் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு கொமஸ்ஷல் வங்கியில் கடமையில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் “இன்று இலங்கை பூராகவும் கொமஸ்ஷல் வங்கியின் ATM இயந்திரம் செயழிலந்துள்ளது என்று கூறி நீங்கள் கொஞ்ச நேரம் காத்து நின்றால் அது வேலை செய்யும் அப்போது பணம் பெறமுடியும்” என கூறியுள்ளார்.
குறித்த பெண் காத்து நிற்கும் போது அவரிடம் நட்புறவில் உறவாடிய பாதுகாப்பு உத்தியோகத்தர் அவருக்கு மயக்கமருந்து கலந்த பபுள்கம் கொடுத்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியள்ளார்.
அத்துடன் அப்பெண்ணின் கடன் அட்டை மூலம் பணத்தையும் திருடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த அவலத்தை தன்னோடு வேலைசெய்யும் பெண்ணுக்கு தெரிவித்துள்ளார்.
இருவருமாக சென்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவில் முறையிட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.