பக்கங்கள்

01 நவம்பர் 2011

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைப்பதற்கு கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரை வரவேற்றுப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு
பல்வேறு இன மக்களும் சேர்ந்து என்னை தமது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்த தொகுதிக்கு வந்துள்ள உங்களை (தமிழ்க் கூட்டமைப்பினரை) வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் எதிர்க்கட்சியில் இருந்து கனடா அரசுக்கு வலியுறுத்தி வருகின்றேன் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும்.
இது குறித்து கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் ராதிகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.