பக்கங்கள்

02 நவம்பர் 2011

முல்லைத்தீவுப் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் ஆட்கள் இன்னும் குடியேறாத பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோவிலடி பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஒருவருடைய சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்திற்கு பழைய இரும்பு சேகரிப்பதற்காகப் பலர் செல்வது வழக்கம் என்றும், அவ்வாறு சென்றவர்களில் ஒருவரே இவ்வாறு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இறந்தவர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவருடன் சென்ற ஏனையோரை பொலிசார் தேடுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தச் சடலம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடததிற்குச் சென்று செவ்வாயன்று கிணற்றில் இருந்து சடலத்தை எடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.