தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று
இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான,
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி
ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஹென்றி மகேந்திரன்
ஆகியோர் நேற்றையதினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை
உருவாக்குதல், அதனைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தல் போன்ற பலவிடயங்கள்
கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தெரிவித்துள்ளார்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதியுயர் சபை
ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் மாவட்ட குழுக்களும், ஏனைய பிரதேச கிராமிய
குழுக்களும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகக்
கூறப்படுகின்றது..
மேற்படி கருத்துக்கள் யாவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை உடனடியாக
நடைமுறைப்படுத்த பல கட்சிகள் விரும்பினாலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அடுத்த
சந்திப்பில் கலந்துரையாட வேண்டுமென சம்பந்தன் கூற அது ஏற்கப்பட்டு அடுத்த வாரமளவில்
மீண்டும் சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.