சாவகச்சேரி ஆலயத்தினுள் சங்கிலி திருடிய இரண்டு பெண்கள் கையும் களவுமாக
பிடிபட்டனர்.. இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை சாவகச்சேரி வாரியப்பர் சிவன்
ஆலயத்தில் இடம்பெற்றது.
வியாழ மாற்றத்தை ஒட்டி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட யாகத்தில் கலந்து கொள்ள
பெருமளவு பக்தர்கள் கூடியிருந்தனர்.
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அடியார்களுடன் நின்ற இரண்டு பெண்களும்
கையில் சேலைத் தலைப்பை சுற்றி வைத்துக் கொண்டு நெரிசலைப் பயன்படுத்தி பெண்
அணிந்திருந்த சங்கிலியை அறுத்துள்ளனர்.
இதனை அவதானித்த சிறுவன் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்ணிடம் சம்பவத்தைக் கூற
அடியார்கள் திரண்டு இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரி
காவல்துறையினரிடம் கையளித்தனர்..
மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களையும்
காவல்துறையினர் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். இந்த
இருவரையும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.