கனடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். மார்க்கம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் மோதுண்டே இவர்கள் இறந்ததாக ஒன்ராரியோ மாகாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பயணிகளுடன் சென்ற வாகனமொன்று ரயர் மாற்றுவதற்காக வீதியின் ஓரத்தில் தள்ளிச் செல்லப்பட்டபோது வாகனத்தைப் பார்ப்பதற்காக அதிலிருந்து கணவனும் மனைவியும் இறங்கியுள்ளனர். |
அச் சமயம் டொயோட்டோ பிக்கப் வாகனமொன்று அவர்களை மோதியுள்ளது. ஒருவர் ஸ்தலத்தில்
பலியானதுடன் மற்றவர் ஆஸ்பத்திரியில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாகனத்தில்
இருந்த மற்றைய இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளனர். தற்போது
அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக ரொறன்ரோ சி.ரி.வி. கனடா
செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பிக்கப் ரக்கின் பெண் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் பலியான ஜோர்ஜ் தேவராஜா (வயது 59), வாமா தேவராஜா (வயது 57 ) ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரிட்டனில் வசித்து வந்தவர்கள் என்றும், கனடாவுக்குச் சென்ற தருணத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக கொழும்பிலுள்ள அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். |
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
09 மே 2012
உடுவிலை சேர்ந்தவர்கள் வாகன விபத்தில் கனடாவில் பலி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.