ஆட்டோவில் வீடு வீடாகச் சென்று பழைய இரும்பு சேகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர் ஒருவர், வீட்டிலிருந்த இளம் பெண்மீது பாலியல் பலாற்காரம் புரிந்துள்ளார். 19ம்திகதி காலை காரைநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு பழைய இரும்பு சேகரிக்க சென்ற இவர், தம்மிடம் உள்ள பழைய இரும்புகளை வீட்டின் பின்வளவில் தாயார் எடுக்கச் சென்ற சமயத்தில் அவரது மகள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகித்துள்ளார். தனது ஆட்டோவில் தப்பியோட முற்பட்டவரை ஊரவர்கள் ஒன்று கூடி பிடித்து நையப் புடைத்துள்ளனர். இவ்விடயம் சம்பந்தமாக காரைநகர் பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காரைநகர், வட்டுக்கோட்டை, பொலீசார் வந்து காயமடைந்த இளைஞனை கைது செய்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பொலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டார். பெண்ணின் பெற்றோர்கள் டாக்டர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அறிப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பழைய இரும்பு சேரித்தல் முக்கியதொழிலாக உள்ளது. கடந்த வருடம் ஒரு கிலோ இரும்பு 30 ரூபாவாகவும் இந்த வருடம் 60 ரூபாவிற்கு உயர்ந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வீடுகள், படலைகள், வண்டில்கள் போன்றவற்றின் இரும்புகளை பழைய இரும்புக்காக களவு எடுத்து விற்கப்படுவது தெரிந்ததே. இப்படியான பழைய இரும்பு கேசரிப்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல கற்பழிப்பு, கொள்ளை, களவு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும், ஆள் இல்லாத வீடுகளின் உள்ளே புகுந்து இவர்கள் இரும்புகள் களவெடுத்து பிடிபட்டு பலஇடங்களில் சண்டையில் முடிவடைந்ததுமுண்டு என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.இதேவேளை இச்செயலை கண்டித்து யாழ்,முஸ்லீம் சமூகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும்
அறியப்படுகின்றது.இந்த பாதகச்செயலை செய்தவர்கள் எமது கையில் கிடைத்திருந்தால் அடித்தே கொன்றிருப்போம்
என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்
என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.