யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற
துப்பாக்கிப்பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள
ஸ்ரீதர் திரையரங்கிற்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றிருக்கின்றது.இராணுவத்தினர் இருவரும்
தம்மைத்தாமே சுட்டுக்கொண்டதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று
சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதுவரையில் அந்தப் பகுதியிலேயே இருவரது சடலங்களும்
காணப்படுவதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.