ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில்
நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை (சிங்கக்கொடியை) ஏந்தியது குறித்து
மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கக்கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச்
செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து
கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக்
கொடியை(சிங்கக்கொடியை) ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச
வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர்
தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை
சம்பந்தன் அவர்கள் மே தின ஊர்வலத்தின் போது விரும்பியே ஏந்தியுள்ளார் என்பது
தெளிவாகிறது.அத்தோடு எதிர் கட்சிகள் திட்டமிட்டே சிறீலங்காவின் தேசியக் கொடியினை
சம்பந்தன் அவர்களின் கையில் கொடுத்ததாக மாவை சேனாதி ராஜா அவர்கள் தெரிவித்து
மன்னிப்பு கேட்டிருந்தமையும் அரியநேத்திரன் ரணில் விக்கிம சிங்க மீது குற்றம்
சுமத்தியதும் அபாண்டமான பொய்களென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.