தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு
பகுதியினில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி
பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை
நடத்தியுள்ளனர்.
எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத
நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். மிக அண்மைக் காலங்களினில்
மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும்
ஒன்றாகும்.
துப்பாக்கிதாரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக
துப்பாக்கியை நுழைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எனினும் அவ்வேளை
குறித்த அறையினுள் எவரும் இருந்திராமையால் உயிரிழப்புக்களோ காயங்களோ
ஏற்பட்டிருக்கவில்லை.
ஏற்கனவே இதே பகுதியில் இளம் யுவதியொருத்தி கடத்தி
சென்று படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மாடு மேய்க்கவென சென்றவரென நம்பப்படும்
பொதுமகன் ஓருவர் இதே பகுதியை அண்மித்த பகுதியில் இன்று சடலமாக
மீடகப்பட்டுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் குறைந்த இப்பகுதியில் வெறுமனே
உள்ளாடைகளுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட கொலையொன்றாக இதுவிருக்கலாமென
நம்பப்படும் நிலையினில் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத
அறையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.