தமிழ்நாடு - ராமநாதபுரம் மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதி ஜெகன் (18)
கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள்
முகாமில், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்..
வீடு அருகில் உள்ள ஆள் இல்லாத அறையில் உறங்கிக் கொண்டிருந்த இவரை அதிகாலையில்,
அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் போத்தலால்
கீறப்பட்ட காயங்கள் இருந்துள்ளன..
மண்டபம் காவல்துறையினரின் விசாரணையில், இவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக
தெரியவர வில்லை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரிடம்
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.