தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தற்போது சிங்கள மயமாக வருவதை காணக்ககூடியதாக உள்ளது. அதில் தமிழர் பிரதேசங்களில் புத்த விகாரைகளை அமைத்தல் மற்றும் பிரதேசங்களின் பெயர்களை மாற்றுதல் போன்றன அசுர வேகத்தில் மாற்றம் அடைந்து வருகின்றன.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் இவ்வாறன மாற்றங்கள் தமிழ் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்கள பெயர்களில் மாற்றம் அடைந்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற பிரதேசங்கள் சிங்கள மயமாக மாறிவருகின்றது. தென் இலங்கையில் வரும் சுற்றுலா பயணிகள் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வதற்காக அரசு இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் தமிழர் பாரம்பரியங்களாக பேணி வந்த அனைத்தும் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சுட்டி காட்டவேண்டிய விடயம் தமிழர் பிரதேச வீதிப்பலகைகள் சிங்கள பெயரில் மாற்றப்பட்டு வருகின்றன...
உதாரணமாக யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வீதி 'தம்பலகொடபடுவ' எனும் பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பல வீதிகள் பிரதேசங்கள் சிங்கள பெயர்களில் மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.