பக்கங்கள்

01 ஜூலை 2011

வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை.

வவுனியா, குருமண்காடு பேரூந்து நிறுத்தத்தில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து இரண்டு வாரமான பெண் குழந்தை ஒன்று நேற்று வவுனியா குருமன்காடு காவற்றுறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையொன்று காணப்படுவதாக மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா குருமன்காடு காவற்றுறையினர் அக்குழந்தையை மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். காவற்றுறையினர் குழந்தையின் தாயைத் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று கிலோ நிறையுடன் நல்ல தேக ஆரோக்கியத்துடன் உள்ள அக் குழந்தை தற்போது வவுனியா பொது மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.