அமெரிக்கா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூனும் ஒன்றாக இருந்து இலங்கையின் கொலைக்களம் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை பார்வையிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மறுதினம் பான் கீ மூனைச் சந்தித்து ரணில் பேச்சு நடத்தவுள்ளார். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரணில், அரசின் உயர்மட்டத் தவைர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். விஜயத்தின் இறுதியாக நாளை மறுதினம் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். கடந்த மாதம் 15 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படம் இதுவரை தாம் பார்க்கவில்லை என்று பான் கீ மூன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.