கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 3,500 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் அடித்து விரட்டியுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,
தமிழகத்தில் இருந்து 700 படகுகளில் 3500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இன்று காலை கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 2 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அவர்கள் தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்து அவர்களை விரட்டி அடித்தனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற பயத்தில் மீனவர்கள் கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் வெறுங்கையுடன் தமிழக மீனவர்கள் கரைக்கு வந்தனர். ஒரே வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.