பக்கங்கள்

02 ஜூன் 2011

கட்டுநாயக்காவிலும் தமது காடைத்தனத்தை அரங்கேற்றிய சிங்களப் பொலிஸ்.

இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார்.
இவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இக்குற்றச் சாட்டினை முன் வைத்தார்.
இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:
ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களில் ஒரு தொகையினர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாம் இவர்களை நேரில் சென்று பார்த்தோம்.
அந்தரங்க உறுப்புக்கள் மீது தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர்கள் பலர் வெட்கம் காரணமாக வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் உள்ளார்கள். அத்தோடு அச்சம் காரணமாகவும் வைத்தியசாலைக்கு வர மறுக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையில் அரச உளவாளிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.