பக்கங்கள்

03 நவம்பர் 2010

வேலணையில் ஆயுதமுனையில் கொள்ளை!

வேலணை வடக்கு இராசையா வீதியிலுள்ள வீடு ஒன்றினுள் கத்திகள், இரும்புக் கம்பிகள் சகிதம் பாரிய ஆயுதங்களுடன் உள்ளே நுளைந்த திருடர்கள் அங்கு இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டின் உரிமையாளரை தாக்கிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரமாக அங்கு நிதானமாக இருந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு வீட்டில் இருந்த அனைத்து பெறுமதியான பொருட்களையும் சூறையாடியுள்ளனர். 20 பவுண் தங்க நகைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் 50 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் செய்மதி அன்ரனா போன்றவையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வேலணை வடக்கு இராசையா வீதியைச் சேர்ந்த இரத்தினசபாபதி என்பவரது வீட்டிலேயே இப்பயங்கர கொள்ளை இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.