கொழும்பின் பிரபல பாடசாலையான ஆனந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஒக்ரோபர் 30 ஆம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு வந்திருந்த அவரது பாதுகாப்புப் பிரிவினர் அக்கல்லூரியின் வகுப்பறை ஒன்றிலிருந்து 0.2 மி.மீ கைத்துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்துள்ளனராம்.
ஆனால் இத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கோ அல்லது வெளியாருக்கோ தகவல் கொடுக்க வேண்டாம் என்று போலீஸ் மா அதிபர் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். ஆனால் செய்தி எவ்வாறோ வெளியில் கசிந்துள்ளது.
இத்துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொல்ல முடியாது எனக் கூறப்படுகிறது. இதன் ரவைக்குள் சயனைட் மருந்தைச் செலுத்தி ஒரு யானை மீது சுட்டால்கூட, யானை கொஞ்ச நேர மயக்கத்தில்தான் இருக்குமே ஒழிய இறக்க மாட்டாது எனப்படுகிறது. அப்பாடசாலையில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் நடைபெறுவதில்லை. இந்நிலையில் துப்பாக்கி மட்டும் வகுப்பறையில் வந்து சேர்ந்தது எவ்வாறு என பாதுகாப்புப் பிரிவினர் குழம்பிப்போயுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.