பக்கங்கள்

05 நவம்பர் 2010

பாலியல் தொல்லை: மக்களுக்கும் சிங்களப்படைக்கும் முறுகல்!

தென்னிலங்கையிலிருந்து கிட்டத்தட்ட 600 முதல் 800 சிங்கள மற்றும் முஸ்லிம் மீனவர்களை படைத்துணையுடன் இலங்கை அரசு வடமராட்சி கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் அழைத்துவரப்பட்ட இம்மீனவர்கள் குடத்தனை மற்றும் மணற்காடு ஆகிய பகுதிகளில் குவிந்துள்ளதால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வளவிற்கும் அங்குள்ள தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட சிங்களப்படை மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அங்குள்ள தென்னிலங்கை மீனவர்களில் ஒருவர் அங்கிருந்த இளம் தமிழ்ப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குறித்து மீனவரைத் துரத்தியடித்தனர். ஆனால் மீனவரைப் பாதுகாப்பதற்காக இதில் சிங்களப்படையினர் தலையிட்டனர். இதனால் மேலும் கோபம் கொண்ட மக்கள் படையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலைமை நிலவுகிறது.
தென்னிலங்கை மீனவர்களின் நடவடிக்கைகளால் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட வடமராட்சி மக்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றுக்கு பெரும் பங்கம் விளைந்துள்ளது. தெற்கிலிருந்து வந்த 'வெற்றியாளர்கள்' தாம் என்ற எண்ணத்துடன் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நடந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.