லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக மகிந்த அழைக்கப்படிருந்தார். அவர் நவம்பர் மாதம் 7ம் திகதி இங்கு வருவதற்காக சகல ஏற்பாடுகளும் மிக இரகசியமாக ஏற்பாடாகி வந்தது. ஆனால் விடையம் அறிந்த வட்டாராங்களூடாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை, மகிந்த லண்டன் வரும்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதனையும் ஆராயத் தொடங்கியது.
1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் சிலியன் சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட், லண்டனில் வைத்து ஸ்கொட்லான் யார்ட் போலீஸ் கைது செய்தது. இவர் தனது 17 ஆவது ஆண்டு ஆட்சியின்போது ஸ்பனிஷ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்திருந்தார். இதன் அடிப்படையில் மகிந்தவையும் கைதுசெய்யலாமா என ஆராயப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியா வந்தால் மகிந்த கைதுசெய்யப்படலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பாக டைம்ஸ் ஒப் இந்தியா நேற்று செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மகிந்த லண்டன் வரமாட்டார் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு அவர் டிசம்பர் மாதமே செல்லவுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வறிவித்தலானது பிரித்தானிய தமிழர்களின் வெற்றியைப் புலப்படுத்துகிறது. ஒன்றிணைந்த சக்தியாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் செயல்படுவதால் இந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது. கடந்த மாதம் ஜி.எல் பீரிஸ் பிரித்தானியா வருகைதந்தபோது மக்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டமே, இவை அனைத்திற்கும் வித்திட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் பிரித்தானிய தமிழர்கள் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதாவது மகிந்த குடும்பத்தினர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே உள்ள தமிழர்கள், தமிழ் அமைப்புகளூடாக சட்ட நடவடிக்கை எடுப்பது நல்லது.
இதன்மூலம் போர் குற்றம் புரிந்தவர்களை நீதி மன்றின் முன் ஏற்ற முடியும். எத்தனை ஆண்டுகள் ஆனால் தமிழர்கள் இதனை மறக்கப்போவது இல்லை என்பதை நாம் உரக்கச் சொல்வோம். தமிழால் ஒன்றிணைவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.