மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவின் இலுப்படிச்சேனைப்பகுதியில் நீர்வடிந்தோடும் வாய்க்காலில் நீருக்குள் மூழ்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரடியனாறில் கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த, பதுளை ஹாலிஎல ரொக்தனவத்தையைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய இரு குழந்தைகளின் தந்தையான சிவஞானம் என்று அழைக்கப்படும் பெரிய சாமிமுத்து சாமியின் சடலமே இவ்விதம் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.
நேற்றிரவு கரடியனாறு மதுபானசாலையில் தமது சக தொழிலாளிகள் நால்வருடன் மது அருந்தச் சென்றவர் தங்குமிடம் வந்து சேரவில்லையென முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று குறித்த நீர் வாய்க்காலில் சடலமாகக் அவரைக் கண்டுபிடித்ததாக பொலிஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவின் ஆலோசனைக்கமைய கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.