பக்கங்கள்

04 நவம்பர் 2010

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்த ஒருவர் யுத்தக் குற்றவாளியாம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் ஒருவர் யுத்தக் குற்றவாளி என Canada Border Services Agency ஆல் அடையாளம் காணப்பட்டுள்ளாராம்,
ஆயினும் இவரது பெயரை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் யுத்தக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றமையால் கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கு அருகதை அற்றவர் என்று Canada Border Services Agency ஐச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேற்படி தமிழர்களுக்காக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை முன் ஆஜராகி வரும் சட்டத்தரணி இந்நபர் ஒரு போர்க் குற்றவாளி என்பதை முற்றாக நிராகரித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.