கண்டல்காட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமது இடங்களுக்குத் திரும்பியிருந்தனர். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று அப்பகுதிக்குச் சென்ற கிண்ணியா போலீசார் மேற்படி குடிசைகளுக்குத் தீவைத்ததோடு, முஸ்லிம் மக்களால் பயிரிடப்பட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இம்மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு எதுவித அறிவித்தலையும் விடுவிக்காத போலீஸ் இவ்வாறு அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை அன்று கிண்ணியா நகரத்திலுள்ள புகாரி சந்தியில் தமது ஜும்மா வழிபாடுகளை முடித்துக் கொண்ட முஸ்லிம்கள் போலீசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசின் அடாவடியைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பலவும் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், தமது சொந்த நிலத்தில் குடியேற நிர்வாக அதிகாரிகள் தம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.