கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்துக்கு சென்று வந்தனை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசியமான முறையில் பிள்ளையான் சுவிட்சர்லாந்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்.
பிள்ளையான் சுவிட்சர்லாந்தில் சந்தித்த நபர்கள் மற்றும் அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் பின்னர் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் இணங்கினார் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.