தமிழ்நாட்டுக்கு வரும் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
தனது உறவினரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தாக்கப்பட்டதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
அவர் ஒரு இந்து என்றும், வடக்கைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறிய அவர், இந்தத் தாக்குதலை இந்திய மீனவர்கள் கூட எதிர்த்துள்ளனர் என்றும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தமிழ்நாடு முதல்வருக்கு செய்தி வைத்துள்ளீர்களா என்று கேட்கப்பட்ட போது,“இதை நிறுத்துங்கள்“ என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.